மூன்றே நாளில் கோடிக்கணக்கில் வெற்றிநடை போடும் “புஷ்பா”!

0
78
pushpa

புஷ்பா

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்கும் படம் புஷ்பா. இந்த படமானது சுகுமார் இயக்கத்தில் கடந்த வாரம் ஐந்து மொழிகளில் வெளியானது.

மூன்று நாள்

இந்த படத்தின் மொத்த வியாபாரம் 150 கோடி ஆகும். இந்த தொகையை கடந்து அதிகமானால் லாபத்தில் இந்த படம் நுழையும். இந்த படம் வெளியாகி 3 நாளிலேயே 173 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

அல்லு அர்ஜுன் ஆசை

பல இடங்களில் பாகுபலியை விட அதிக வசூலை படைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் மூன்று நாட்களில் 11 கோடி வசூலித்துள்ளதால் தமிழில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை அல்லு அர்ஜுனுக்கு நிறைவேறியுள்ளது.

ஹிந்தி

இந்த படம் மூன்று நாட்களில் ஹிந்தியில் 12 கோடி ரூபாய் வசூலை கண்டுள்ளது. படத்திற்கான விளம்பரம் மிக குறைவாக இருந்த போதிலும் வசூல் அதிகம் என்கின்றனர்.

வருத்தம்

தமிழில் இப்படத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தவில்லை என்றும், பத்திரிக்கையாளர் காட்சியை கூட போடவில்லை என்றும் கூறுகிறார்கள். விளம்பரப்படுத்தியிருந்தால் இன்னும் அதிகமான வசூலை பெற்றிருக்கும் என வருத்தம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here