மெட்ரோ நிலையங்களில் தண்டவாளங்களுக்கு கூரை!

0
63
metro

மெட்ரோ ரயில்

ஏழு மெட்ரோ நிலையங்களில் 2.5 கோடி செலவில் கூரை மேம்பாடு பணிகள் நடைபெற உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் ஆலந்தூர்- கோயம்பேடு நிலையங்கள் இடையே ஜூன் 29 மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது.

கூரை

இந்த நிலையத்திற்கும், இந்த பாதையில் உள்ள அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் நிலையங்களுக்கும் நடைமேடை பகுதியில் கூரை நிறுவப்பட்டது. ரயில் தண்டவாளம் பகுதியில் கூரை அமைக்கப்படாததால் மழை காலங்களில் மழைநீர் விழுந்து வெளியேறும் நிலை உள்ளது.

நடவடிக்கை

மழையால் தண்டவாளங்கள் துருபிடிக்கும் நிலையும், பக்கவாட்டு தடுப்பு சுவர்கள் பராமரிப்பிற்கு கூடுதல் செலவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த காரணங்களால் மேம்பாட்டு பணிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாலிகார்பனேட் கூரை

இந்த ஏழு நிலையங்களிலும் நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள பாலிகார்பனேட் வண்ண கூரை நிறுவப்படுகிறது. ஆலந்தூர் மெட்ரோ நிலையங்களில் வெளிச்ச வசதிக்காக கண்ணாடி சுவர் நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here