மெரினா கடற்கரைக்கு சென்று புத்தாண்டு கொண்டாட பொதுமக்களுக்கு தடை!

0
67
thadai

அறிக்கை

கொரோனா பரவல் முடிவதற்கு முன்பாக ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதன் காரணமாக தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அனுமதி

போலீஸ் கமிஷ்னர் இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரை அத்தியாவசிய வாகனங்கள் மட்டும் வர வேண்டும் என தெரிவித்தார்.

மெரினா கடற்கரை

இன்றும்,நாளையும் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை போடப்பட்டு உள்ளது. புத்தாண்டு அன்று மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் கூடுவார்கள்.

தடை

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மெரினாவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு யாரும் செல்ல முடியாத அளவிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

காவலர்கள்

மெரினாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்க உள்ளனர். மதுபோதையில் சுற்றுபவர்களை கைது செய்யவும் உத்தரவு போடப்பட்டுள்ளது.

ஊரடங்கு

தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் ஆள் நடமாட்டம் இருக்காது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here