மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கல்லூரி மாணவன் பலி!!!!

0
72
கல்லூரி மாணவன்

எடப்பாடி என்ற ஊரின் அருகே மரத்தில் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி. 2 பேருக்கு படுங்காயம்.

கல்லூரி மாணவன்

எடப்பாடி பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் ஜனார்த்தனன் வயது 19. இவர் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரி விடுமுறை எனவே ஜனார்த்தனன் தன் நண்பர்கள் சவுந்தர் வயது 20, யஸ்வந்த் வயது 18 ஆகியோருடன் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்கள்.

மரத்தில் மோதி பலி

திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்ற மரத்தில் மோதியது. இதில் ஜனார்த்தனன் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜனார்த்தனன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

2 பேருக்கு தீவிர சிகிச்சை

விபத்தில் காயம் அடைந்த சவுந்தர் மற்றும் யஸ்வந்த் ஆகிய 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here