யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்தவர்கள் மீது வழக்கு!

0
61
youtube

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெடும்புலி கிராமத்தை சேர்ந்த லோகநாதன்,அவருடைய வயது 34. இவரது மனைவி கோமதி 28 வயது கொண்டவர்.

பிரசவ தேதி

டாக்டர்கள் கடந்த 12ம் தேதி அவருக்கு பிரசவம் ஆகும் என கூறினர். டாக்டர் கூறிய தினத்தில் பிரசவம் ஆகவில்லை. 18ம் தேதி மாலை 3 மணிக்கு அவருக்கு வலி ஏற்பட்டுள்ளது. அக்கா, தம்பி இருவரும் சேர்ந்து யூடியூப் சேனலை பார்த்து பிரசவம் பார்த்துள்ளனர்.

சிகிச்சை

கோமதிக்கு ரத்த போக்கு அதிகரித்ததால் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதனால் அவரை புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். பின் அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

புகார்

புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் மோகன் புகார் அளித்துள்ளார். இதனால் லோகநாதன், அவருடைய அக்கா கீதா மீது இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு பதிவு செய்ததால் அவர்கள் இருவரும் தற்போது தலைமறைவாகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here