ராமநாதபுரம் சாதனை; மீன் பிடிப்பதில் முதலிடம் !!!

0
92
mean pedithal

தேசிய அளவில் 10 லட்சம் டன் மீன் பிடித்து 2020 – 21ல் நாட்டில் முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 2.64 லட்சம் டன் மீன் பிடித்து மூன்றாவது முறையாக தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.

மீன்பிடி தொழில்

தமிழ் நாட்டில் ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், நாகை, கடலுார், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு மீன்பிடி தொழில் நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,600 விசைப்படகுகள், 5,000த்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடிக்கின்றார்கள். 40 ஆயிரம் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பி வாழ்கின்றனர்.

1.45 லட்சம்

ராமநாதபுரம் மாவட்டம் மட்டும் 1.45 லட்சம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டு தமிழ் நாட்டில் முதலிடம் பெற்றது. 2019ல் 7.75 லட்சம் டன் மீன்பிடித்து தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.

தேசிய அளவில் தமிழகம் முதலிடம்

2020 -2021 ஆண்டில் 10 லட்சம் டன் மீன் பிடித்து தேசிய அளவில் தமிழகம் முதலிடத்திலும், ராமநாதபுரம் 2.64 லட்சம் டன் மீன் பிடித்து தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது.

உற்பத்தி

தமிழ் நாட்டில் கடல் இறால் வளர்ப்பில் 2,688 டன் மீன்களும், உள்நாட்டு நன்னீர் வளர்ப்பில் 800 டன் மீன்களும் உற்பத்தி செய்யப்படுகின்றனர். மீன் உற்பத்தியில் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here