ரூ.15 கோடி 70 லட்சம் இழப்பீடு – திருட்டு பழிக்கு ஆளான பெண்

0
51

அமெரிக்காவில் திருட்டு பழிக்கு ஆளான பெண்ணுக்கு 15 கோடியே 70 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருட்டு

அமெரிக்கா அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் லெஸ்லெய்க். இவர் வால்மார்ட் கடையில் பொருள்களை வாங்கியுள்ளார். 3,500 மதிப்புள்ள கிறிஸ்துமஸ் மின்விளக்குகளை திருடியதாக கடை மேலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

புகார்

லெஸ்லெய்க் நர்ஸ் இதனை மறுத்த போதும் கடை மேலாளர் ஏற்காமல் போலீசில் புகார் அளித்துள்ளார். லெஸ்லெய்க் நர்ஸ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு ஓராண்டிற்கு பின் கைவிடபட்டுள்ளது லெஸ்லெய்க்கு தெரிவிக்கப்பட்டது.

இழப்பீடு

லெஸ்லெய்க் மீது மீண்டும் வால்மார்ட் நிறுவனத்தின் சட்ட ஆலோசனை நிறுவனம் வழக்கு தொடர உள்ளதாக நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கை தொடர்ந்து லெஸ்லெய்க் வழக்கு தொடர்ந்தார். வால்மார்ட் அவருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திய குற்றச்சாட்டிற்கு 15 கோடி 70 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

லெஸ்லெய்க் உதவி

கடை உதவியாளர் தயவின்றி, ‘பார்கோடு’ வாயிலாக பொருட்களை பட்டியலிட்ட போது திடீரென இயந்திரம் பழுதாகி விட்டது. ஒரு பணியாளர் லெஸ்லெய்க்கு பொருட்களை பட்டியலிட உதவி உள்ளார் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கவனக்குறைவு

கிறிஸ்துமஸ் விளக்குகளை அந்த பணியாளர் கவனக்குறைவால் பட்டியலில் சேர்க்க தவறியுள்ளார். அதனால் லெஸ்லெய்க் மீது திருட்டு பழி சுமத்தினார் கடை மேலாளர். இது பெரிய குற்றம் என்றும் வழக்கு தொடருவதாக லெஸ்லெய்க்கை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு வால்மார்ட் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here