ரேஷன் அரிசி கடத்தி விற்க முயன்ற 5 நபர்கள் கைது!

0
64
kutram

அரிசி

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தனியார் அரிசி ஆலையில் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்க பதுக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.

பறிமுதல்

அங்கிருந்து 20 ஆயிரத்து 850 கிலோ ரேஷன் அரிசியை குற்றப்புலனாய்வு துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது

ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here