லஞ்சம் வாங்கி பணத்தை மறைத்த கூட்டுறவு வங்கி செயலர் கைது!

0
63
லஞ்சம்

வங்கி செயலர்

தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை செயலராக முருகன் பணிபுரிந்து வருகிறார். இந்த வங்கியில் அரூர் அருகே உள்ள விவசாயி டிராக்டர் வாங்குவதற்காக 63,000 கடன் வாங்கியுள்ளார்.

சான்றிதழ்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடன் முடித்த சான்றிதழை வாங்க சென்ற போது 5,000 கேட்டு பின் 3,500 ரூபாய் கொடுத்தால் தான் சான்றிதழ் தரமுடியும் என தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு துறை

லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜன் தர்மபுரியில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். நேற்று அறைவுரையின் பேரில் ரசாயனம் தடவிய 3,500 பணத்தை கொண்டு முருகனை சந்தித்து கொடுத்தார்.

போலீசார்

மறைந்திருந்த போலீசார் லஞ்சம் வாங்கியவுடன் அவரை பிடித்தனர். அவரிடம் பணம் இல்லாததை பார்த்த போலீசார் விசாரித்ததில் முருகன் பணத்தை கழிவறையில் போட்டு தண்ணீர் ஊற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது

பேரூராட்சி பணியாளர்களை அங்கு வரவழைத்து 2 மணி நேரம் போராடி பணத்தை மீட்டனர். லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here