வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி; பொங்கல் அன்று அமல்

0
78
gold

கூட்டுறவு துறை

சென்னையில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தொடர்பான ஆய்வை 10 நாட்களில் முடிக்க கெடு விதிக்கப்பட்ட நிலையில், பொங்கல் அன்று அடமான நகைகளை திரும்ப வழங்க கூட்டுறவு துறை முடிவு எடுத்துள்ளது.

நகை கடன்

கூட்டுறவு வங்கிககள் கூட்டுறவு கடன் சங்கங்கள் தங்க நகைகளுக்கு அடமான கடன் வழங்குகின்றது.அதில் 5 சவரன் வரை நகை கடன்களை தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்துள்ளது. தி.மு.க., – அ.தி.மு.க., சார்பில் நகை தள்ளுபடி தொடர்பாக வாக்கு உறுதி அளிக்கப்பட்டது. இதனால் அந்த சலுகையை பெற ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வங்கிகளில் நகை கடன் பெற்ற்றுள்ளனர். சிலர் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்தும் கடன் பெற்றுள்ளனர்.

nakaikadan

நகை கடன் தள்ளுபடி

கூட்டுறவு சங்க நகைக் கடன்களை ஆய்வு செய்யுமாறு அந்த பணிகளை நவம்பர் 30க்குள் முடிக்குமாறும் கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் நகைகளை அடகு வைத்தவர்கள் தங்களின் நகைகளை திரும்ப வழங்க கூட்டுறவு வங்கிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் இந்த மாதம் இறுதிக்குள் நகை கடன் ஆய்வை முடிக்க கெடு விதிக்கப்பட்டு உள்ளது. கடன் தள்ளுபடி சான்று மற்றும் அடகு வைத்த நகைகளை பொங்கலுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here