வங்கியில் நகை மோசடி! ஊழியர் மீது போலீசில் புகார்.

0
70
gold..

புதுவை நகர கூட்டுறவு வங்கியில் தங்கத்துக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து ரூ.35 லட்சம் மோசடி செய்து இருப்பது வாடிக்கையாளறையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கவரிங்

புதுவை லாஸ்பேட்டை மெயின்ரோட்டில் நகர கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு மக்கள் தங்கள் அவசர தேவைக்கு அடமானம் வைத்த தங்க நகைகளை ஊழியர் ஒருவர் எடுத்து அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்தாது புகார் எழுந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகள் அந்த வங்கியில் வைத்து இருந்த நகையை ஆய்வு செய்தனர்.

ஆய்வு

அங்கு அடகு வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட அடகு நகையை அதிகாரிகள் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்தாது தெரியவந்தது. இதுவரை ஆய்வு செய்ததில் சுமார் ரூ.35 லட்சம் வரை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது அவர்கள் தேவைக்காக தங்க நகைகளை அடமானம் வைத்து கடன்பெற்றுள்ளனர்.

வாடிக்கையாளர்

துறை ரீதியான முழு விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது போலீசில் புகார் அளிக்கும்மாறு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று கூறப்பட்டுள்ளது.தங்க நகைகளுக்கு பதிலாக அதேபோல் கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்தாது அறிந்த அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர் . தங்கள் நகை என்னதானதோ என்று பதற்றமடைந்தனர்.கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here