வறட்சியால் எலும்பும் தோலுமாக கிடக்கும் வனவிலங்குகள்! – அதிர்ச்சியளிக்க வைக்கும் சில புகைப்படங்கள்!

0
71
ottaka sivingi

கென்யாவில் மழை

இந்த ஆண்டு கென்யாவில் அதிக மழை பெய்யாததால் வனப்பகுதியிலும் அதிக வறட்சி நிலவுகிறது. வடக்கு பகுதி கென்யாவில் 30 சதவீதத்திற்கும் குறைவாக மழை பெய்துள்ளது.

பாதிப்பு

அந்த நாட்டின் வஜீப் பகுதியில் உள்ள சபுலி வனவிலங்குகள் காப்பகத்தில் குடிக்க தண்ணீர் இல்லாமல் விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒட்டகச்சிவிங்கி

பூங்காவில் தண்ணீர் இல்லாததால் 6 ஒட்டக சிவிங்கிகள் ஒரே இடத்தில் இறந்து கிடக்கின்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அதனை பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக இருந்துள்ளது.

சேற்றில் சிக்கியது

ஆறு ஒட்டகச்சிவிங்கிகளும் தண்ணீரை தேடி கிடைக்காததால் ஒரே இடத்தில் விழுந்து இறந்துள்ளன. சோர்வாக இருந்த விலங்குகள் சேற்றில் சிக்கி இறந்துள்ளன.

காட்டுவிலங்குகள்

உணவுக்கும் தண்ணீருக்கும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வீட்டில் வளர்க்கப்படும் உயிரினங்கள் பாதுகாப்பாகவும், காட்டுவிலங்குகள் தண்ணீர் இன்றி உயிரிழக்கின்றன எனவும் அல்ஜசீரா கூறுகிறார்.

மக்கள் பாதிப்பு

காரிஸா நாட்டில் 4000க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் 2.5 மில்லியன் மக்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here