வலிமை படத்திற்கு யுஏ சான்று கொடுத்த தணிக்கை குழு!

0
71
valimai

வலிமை

வினோத் இயக்கியுள்ள அஜித் நடிக்கும் இந்த படத்தில் அஜித்துடன் ஹூயுமா குரேஷி, புகழ் உட்பட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் டிரைலர் வெளியாகி பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்தது.

தணிக்கை குழு

தற்போது கொரோனா பரவல் காரணமாக வெளியாவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த தணிக்கை குழு யுஏ சான்றிதழ் கொடுத்தாலும் 15 காட்சிகளை திருத்தம் செய்ய கூறியுள்ளது.

விவரங்கள்

 • தமிழ், ஆங்கிலத்தில் படம் முடிந்த பின் டைட்டில் கார்டு இடம் பெற வேண்டும்.
 • விலங்குகள் குறித்த அங்கீகரிக்கபடாத காட்சிகளை நீக்க வேண்டும்.
 • தங்கச்சங்கிலி பறிப்பு நிகழ்ச்சியில் ஆட்டோவில் இருந்து குழந்தையுடன் விழும் பெண்ணின் காட்சி நீக்கப்பட வேண்டும்.
 • போதை பொருள் பயன்படுத்தும் காட்சிகளை அகற்ற வேண்டும்.
 • வக்காலி என்ற வார்த்தையை அந்த படத்தில் மவுனிக்க வேண்டும்.
 • சண்டைக்காட்சியில் ரத்தம் தரையில் பரவும் காட்சியை நீக்க வேண்டும்.
 • ஒரு நபரை கத்தியால் குத்திய காட்சியை அகற்ற வேண்டும்.
 • கப்பலில் ஒருவரை கொல்லும் காட்சியை நீக்க வேண்டும்.
 • ‘…த்தா’ வார்த்தை வரும் காட்சிகளில் இந்த வார்த்தை அகற்றப்பட வேண்டும்.
 • நடுவிரலை காட்டும் காட்சியை அகற்ற வேண்டும்.
 • போலீசின் நெஞ்சில் குத்தும் காட்சி அகற்றப்பட வேண்டும்.
 • சண்டைக்காட்சியின் சிறிது நீளத்தை குறைக்க வேண்டும்.
 • போதைப்பொருள் காட்சியில் டிஸ்க்லைமர் கட்டாயம் போட வேண்டும்.
 • கடவுள் தான் நிஜ சாத்தான் என்ற வார்த்தை அகற்றப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here