வாழைப்பழ சிப்ஸ் சாப்பிட்டால் பாதிப்பு

0
70
Banana chips - health care

தென்னிந்திய உணவுகளில் அனைவரும் விரும்பத்தக்க ஒன்று நேந்திரம் சிப்ஸ். இதனை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது.அப்படிப்பட்ட இது நன்மை உண்டாக்குமா இல்லை தீமை உண்டாக்குமா என்று பார்க்கலாம்.நாம் தின்பண்டங்களை அதிகம் பயன்படுத்துவது தவறாகவே கருதப்படுகிறது.

இந்த வாழைப்பழ சிப்ஸ் ஆனது ஊட்டச்சத்துக்களையும், வைட்டமின் எ, இரும்பு, பாஸ்பரஸ் போன்றவற்றை கொண்டுள்ளது. இவற்றை சிறிய அளவு வழங்குகிறது.நமது கண்களுக்கும் ஊட்டச்சத்தை வழங்குகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தை தடுக்கிறது.1 கிராம் புரதம் இதன் மூலம் கிடைக்கிறது.

கொழுப்பிலிருந்து வருவதால் சிறிய அளவு கலோரி காணப்படுகிறது. இவை பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

பாக்கெட் செய்யப்பட்ட சிப்ஸ் இனிமையாக இருக்கும். இதனால் எடை அதிகரிக்கலாம். இதய நோய்க்கும் வாய்ப்புள்ளது. எடை அதிகரிக்க விரும்புபவர்கள் இதை சாப்பிடுவதால் நன்மை உண்டு.

வாழைப்பழ சிப்ஸில் அதிகமாக கொழுப்பு காணப்படுவதால் கொழுப்பு சம்மந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்புள்ளது. மேலும் இதை ஆராய்ந்த போது 1 அவுன்சில் சிப்ஸில் 10 கிராம் கொழுப்பு உள்ளது தெரியவருகிறது.

வாழைப்பழத்தில் 422 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளதால் வாழைப்பழம் சாப்பிடுவதே சிறந்ததாக உள்ளது. உடலுக்கு தேவையான தாதுக்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

வாழைப்பழ சிப்ஸ் குறித்து நிபுணர்கள் கூறியது, ஆரோக்கியமுள்ள ஒரு உணவாக இது இருந்தாலும் எப்போதாவது மட்டும் பயன்படுத்துவது சரியானது.மேலும் அதிகமாக வாழைப்பழத்தை பயன்படுத்துவது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here