விண்வெளியில் செயற்கை கோள் மோதல் என சீனா ஈலோன் மஸ்க் நிறுவனம் மீது புகார்!

0
69
cheena

செயற்கை கோள்

சீனாவின் விண்வெளி நிலையம் ஸ்டார்லிங் செயற்கை கோளுடன் இரண்டு முறை மோதும் நிலை ஏற்பட்டது. உலகின் நம்பர்1 பணக்காரராக வலம் வரும் ஈலோன் ஸ்பேஸ் நிறுவனம் தான் இந்த செயற்கை கோளை இயக்கி வருகிறது.

ஆவணம்

சீனா சமர்ப்பித்த ஆவணத்தில் ஜூலை 1மற்றும் அக்டோபர் 21 தேதிகளில் இந்த சம்பவங்கள் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சீன வலைத்தளத்தில் உள்ள ஆவணத்தில் மோதலை தவிர்க்கும் கட்டுப்பாடுகளை செயல்படுத்தியது என குறிப்பிட்டுள்ளது.

விமர்சனம்

சீனாவின் புகார் பொதுவெளியில் வந்த பின் பல தரப்பினரும் சீனாவின் வைபோவில் கடுமையாக விமரிசிக்கப்பட்டனர். செயற்கை கோள்கள் அமெரிக்காவின் விண்வெளி போர் ஆயுதங்கள் என ஒருவர் விமரிசித்துள்ளார்.

குற்றம்

அமெரிக்கா விண்வெளி உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளை மறுப்பதால் வீரர்களை அபாயத்தில் ஆழ்த்துகிறது என சீனா குற்றம் சாட்டியது. அமெரிக்கா பொறுப்பாக நடக்க வேண்டும் என செய்தி தொடர்பாளர் கூறினார்.

விஞ்ஞானிகள்

விண்வெளியில் கோள்கள் மோதிக்கொள்ளும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். பூமியை சுற்றி வரும் செயற்கை கோள்கள் குறித்து விவரங்களை பகிர்ந்து கொள்ள விஞ்ஞானிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கோள்கள்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 1,900 செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இன்னும் 1,000 கோள்களை நிறுவனம் ஏவ உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here