விளம்பர பலகைகளை அகற்ற மீறினால் கடும் அபராதம்!

0
55
penar

விபத்து

வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் சென்னையில் போக்குவரத்து சாலைகளில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. உத்தரவை மீறி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளதால் பல விபத்துகள் ஏற்படுகிறது.

செய்தி

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் உத்தரவை மீறி விளம்பர பலகைகள் வைத்திருப்பது நாளிதழ் செய்தி வெளியிட்டது. அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் இதனை அகற்ற கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டவை

சென்னை மாநகராட்சியில் 1முதல் 15 வரை மண்டல எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும். அகற்றப்பட்ட விவரத்தை அறிக்கையாக அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அகற்றப்பட்டவை

பெருங்குடி மண்டலத்தில் தாம்பரம், வேளச்சேரி சாலையில் பேனர் அகற்றப்பட்டது. அடையாறு மண்டலத்தில் விளம்பர பலகைகள் அடையாளம் காணப்பட்டு ஏழு இடங்களில் நேற்று அகற்றப்பட்டன.

அதிகாரி கூற்று

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேனர்கள் இந்த ஆண்டில் சென்னையில் அகற்றப்பட்டது. விளம்பர பலகைகளை அகற்ற அதன் உரிமையாளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறினார்கள்.

உறுதி

தாம்பரத்தில் பல இடங்களில் பேனர்கள் கிழிந்து இருப்பதால் அங்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. சென்னை மாநகராட்சியை போல் இங்கும் சட்ட விரோத விளம்பர பலகைகள் அகற்றப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here