வீடியோக்கள் வைத்து மிரட்டி வாலிபர்களிடம் பணம் பறித்த இன்ஜினியரிங் மாணவன் கைது!

0
49
maanavan

கல்லூரி மாணவன்

ராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கன்னு கிராமத்தை சேர்த்த நரேந்திரன் வேலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.

ஹேக்

நரேந்திரன் முகநூலில் வாலிபர்களிடம் பெண்களை போல் பேசி தொலைபேசி நம்பரை பெற்று அவர்களது எண்ணுக்கு குறுஞ்செய்தியை அனுப்புவார். அதனை கிளிக் செய்ததும் அவர்களது செல்போனில் உள்ள புகைப்படம், ஈமெயில் ஐடி என அனைத்தையும் ஹேக் செய்வார்.

வீடியோக்கள்

செல்போன்களை ஹேக் செய்து போலியான ஈமெயில்களையும், வாட்ஸ்அப்பையும் பயன்படுத்தி உள்ளார். இதன் மூலம் இளைனர்களிடம் பெண்களை போல் பேசி அவரை பெண் என நம்பவைத்துள்ளார். வாலிபர்களை நிர்வாணமாக வரவழைத்து அதனை பதிவு செய்துள்ளார்.

புகார்

திருவள்ளூரை அடுத்த பெருமந்தூரை சேர்ந்த ஒரு இளைஞர் நரேந்திரனிடம் சிக்கி கொண்டார். அவர் இதனை குறித்து திருவள்ளூர் எஸ்பி வருண்குமாரிடம் புகாரினை அளித்துள்ளார்.

விசாரணை

சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் அவனை குறித்த அனைத்து விவரங்களும் தெரியவந்தது. அவனிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here