வீட்டிற்குள் சிறுத்தை குட்டிகள் : வனத்துறையினர் சோதனை !!!

0
59
seruthai kutty

சிறுத்தை குட்டிகள்

கேரள மாநிலம் ஒலவக்கோடு பகுதி உம்மினி மலம்புழா வன எல்லையை சேர்ந்த மாதவனுக்கு சொந்தமான, 15 வருடமாக பூட்டி இருந்த வீட்டிற்குள் மதியம் 12 மணிக்கு சிறுத்தை ஒன்று செல்வதை அந்த பகுதியில் உள்ள பொன்னன் கண்டுள்ளார். இதனை அறிந்த மக்கள் வனத் துறையினரிடம் தகவல் கொடுத்தனர். வனத்துறை அதிகாரிகள் வந்து பார்த்த போது வீட்டின் அறையில் 2 சிறுத்தை குட்டிகள் இருப்பதை கண்டனர்.

தாய் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை

பிறந்து 3 நாட்கள் ஆன சிறுத்தை குட்டிகளை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று பராமரித்து வருகின்றனர். மக்கள் வாழும் பகுதியில் சிறுத்தையின் குட்டி இருந்ததால் மக்கள் பீதி அடைய செய்துள்ளது.அம்மா சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் கூறியுள்ளன.

கூண்டு

இதை பற்றி விஜயானந்த் கூறுவதாவது ;அம்மா சிறுத்தையை கண்டுபிடிக்க கூண்டு அமைக்கப்படும். பின் சிறுத்தையையும் அதன் குட்டிகளையும் வனத்தினுள் கொண்டு விடப்படும்.

பொன்னன் கூறியது

இதை பற்றி பொன்னன் கூறியது ; தூரத்தில் புது வீடு கட்டி சென்ற மாதவன், இந்த வீட்டை பார்க்கும் பொறுப்பை என்னிடம் அளித்துள்ளார். இந்த வீட்டில் ஏதோ ஓடிச் செல்வது தெரிந்தது. அது என்னவென்று பார்த்தபோது தான் சிறுத்தை என தெரிந்தது. பயந்து சத்தம் போட்டு மக்களிடம் தெரிவித்தேன். பலரும் வந்ததும் சிறுத்தை சென்று மறைந்தன. வனத்துறையின் சோதனையில் தான் சிறுத்தை குட்டிகள் இருப்பதை தெரிந்து கொண்டோம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here