வீட்டில் கற்பூரத்துடன் கிராம்பை எரித்தால் ஏற்படும் மாற்றங்கள் – நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

0
57
karpooram

தினமும் கடவுளை வழிபடும் போது கற்பூரம் காண்பித்து வழிபடுவது அனைவரின் வழக்கம். இப்படி செய்வது நேர்மறை ஆற்றலை சூழ்ந்திருக்க செய்வதாக நம்பப்படுகிறது.வீட்டில் தினமும் கற்பூரத்தை ஏற்றி வீட்டை சுற்றி காண்பித்து வந்தால் வீட்டில் சந்தோசம், அமைதி, செழிப்பு நிறைந்திருக்கும்.

கற்பூரம் காட்டுவதால் ஏற்படும் மாற்றங்கள்

வாஸ்து தோஷத்தை நீக்கும்

வாஸ்து தோஷத்தை நீக்க கற்பூரத்தை வீட்டின் அனைத்து மூலைகளிலும் வைக்க வேண்டும். கற்பூரங்கள் கரைந்து போனால் வாஸ்து தோஷம் நீங்கிவிட்டது என அர்த்தம். மீண்டும் வேண்டுமானால் கற்பூரங்களை வீட்டின் மூலையில் வைத்து கொள்ளலாம்.

பண பிரச்சனை நீங்கும்

பணி செய்யும் இடம் , வீட்டில் தினமும் 3 கற்பூரத்துடன் கிராம்பையும் சேர்த்து எரித்து வந்தால் பொருளாதார நிலைமை வலுவாகும் என மத நம்பிக்கை உள்ளது.

மன அழுத்தம் நீங்கும்

வீட்டில் தூப தீபம், கற்பூரம் ஏற்றி வைப்பதால் மனம் அமைதியாகி மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். அதிலிருந்து வெளிவரும் நறுமணம் வீட்டில் பரவுவதால் மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளும்.

திருமண பிரச்சனை

கற்பூரத்தை ஏற்றும் போது அதை தினமும் சில்வர், பித்தளை பௌலில் தான் ஏற்ற வேண்டும். படுக்கையை சுத்தம் செய்த பின்னர் கற்பூரத்தை ஏற்றுவது திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை நீக்கும்.

சண்டைகள் குறையும்

கற்பூரத்தை ஏற்றுவதன் மூலம் நேர்மறை ஆற்றல் பரவுவதால் வாழ்வில் முன்னேற்றம் , வெற்றிக்கான பாதை திறக்கிறது. இதன் மூலம் சண்டைகள் குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அறிவியல் காரணம்

கற்பூரம் , தூப தீபத்தை வீட்டில் ஏற்றுவதால், வீட்டினுள் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதுடன் வீட்டில் எப்போதும் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here