வீட்டில் சண்டையை போக்க சில வாஸ்து குறிப்புகள்

0
54

பெரும்பாலான வீடுகளில் இளைஞர்களின் பிரச்சனை எப்போது திருமணம் நடக்கும் என்பது தான். திருமணம் நடந்தாலும் பின் மாமியார் – மருமகள் சண்டை, பிரச்சனை இல்லாமல் இருக்கும் வாழ்க்கை நிம்மதியானதாகவும், இனிமையானதாகவும் செல்லும்.

மாமியார் – மருமகள் இடையே இணக்கமில்லாத நிலை இருப்பதால் இருவரிடையே சண்டையும், குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழலும் இருக்கும்.

சில வாஸ்து குறிப்புகள்

சந்தனம்

வாஸ்து சாஸ்திரப்படி உங்களுக்கு பிடித்த இறைவனின் சந்தன சிலையை வைத்து வழிபட வேண்டும். மனதிற்கு சாந்தம் கிடைக்க சந்தனத்தை நம் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.
சந்தன சிலை வழிபாடு செய்வதால் சண்டை சச்சரவுகள் நீங்கும். மேலும் குடும்பத்தில் பரஸ்பரம் இருக்கும் பதற்றமும் நீங்கும்.

அலமாரிகள் நிறம்:

சமையலறையில் வைக்கப்பட்டுள்ள அலமாரிகள் கருப்பு நிறத்தில் இருக்கக்கூடாது. கருப்பு நிறத்தில் இருந்து வெளியேறக்கூடிய எதிர்மறையான ஆற்றல் மனம், உடல் நலனிற்கு நல்லது அல்ல. பெரும்பாலான நேரத்தை பெண்கள் சமையலறையில் கழிப்பதால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படும்.

புகைப்படம்

குடும்பமாக சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டு அதனை பார்த்து வந்தால் குடும்ப ஒற்றுமை மேம்படும்.

வடகிழக்கில் வைக்க கூடாதவை

வடகிழக்கு பகுதியில் குப்பைத் தொட்டியை வைக்காதீர்கள். வடகிழக்கு மூலையில் குப்பைத் தொட்டி வைப்பதைத் தவிர்த்தால் பரஸ்பர உறவுகளில் பதற்றம், எரிச்சலை முடிவுக்கு கொண்டுவரும். வடகிழக்கு திசையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.

அறைகள்

வீட்டில் தென்மேற்கு திசையில் உள்ள அறையில் மாமியாரும், தெற்கு திசையில் இருக்கும் அறையில் மகன் ,மருமகள் அறை இருக்கலாம். தென்மேற்கு பகுதியில் பெரியவர்கள் மட்டுமே தங்க வேண்டும்.

வழிபாடு

மாமியார், மருமகள் அறைகளில் மனதை சாந்தப்படுத்தக்கூடிய இயற்கை காட்சி படத்தை வைக்க வேண்டும். மனோகாரகனான சந்திர பகவானை வழிபாடு செய்வது சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here