வீனஸ் கிரகத்தில் நுண்ணுயிர்களா!

0
76
venas

ஆராய்ச்சியாளர்கள்

வீனஸ் கிரகத்தில் நுண்ணுயிர்கள் இருக்க கூடும் என கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், கார்டிப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதன் சுற்று சூழலை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

கந்தக அமிலம்

வீனஸ் கிரகம் பூமியில் இருந்து 47.34 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாக தெரிகிறது. இரண்டாவது கிரகமான வீனஸில் கந்தக அமிலம் காணப்படுவதால் உயிர்கள் அங்கு வாழ முடியாது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அம்மோனியா

இங்கிலாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தியதில் அங்கு அம்மோனியா இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறுகிறார்கள். கந்தக அமிலம் இருந்தால் அம்மோனியாவும் இருக்கும் என வேதியல் சான்றுகள் உள்ளதாக கூறுகிறார்கள்.

ஆராய்ச்சியாளர் கூற்று

வீனஸ் கிரகத்தில் அம்மோனியா இருப்பது உண்மையானால் அந்த இடத்தில் நுண்ணுயிரிகள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றார். ஹைட்ரஜன் வாயு அங்கு இருப்பதால் பூமியில் இருக்கும் நுண்ணுயிர்கள் அங்கும் இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here