வெறும் 5 லச்சத்துக்கு மாருதி சுஸுகி செரிலியோ கார்

0
66
maruthi-celerio-new-cars

கடந்த 2014ம் ஆண்டு மாருதி சுஸுகி செரிலியோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி சுஸுகி நிறுவனம் 5.90 லட்சத்திற்கும் மேற்பட்ட செரிலியோ கார்களை விற்பனை செய்தது. செரிலியோ காரின் புதிய மாடலை தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த காரானது கவச்சியான டிசைன் உடன் வந்துள்ளது. குறைவான விலையில், அதிகமாக மைலேஜ் வழங்க கூடியதாகவும் இது உள்ளது. மேலும் இந்தியாவிலேயே அதிக மைலேஜ் தர கூடிய பெட்ரோல் கார் என்ற பெருமை இதற்குள்ளது.

முன்பு இருந்த செரிலியோ காரை விட இந்த கார் வட்ட வடிவமாக இருக்கிறது.புதிய ரேடியண்ட் க்ரில், ஷார்ப்பான ஹெட்லைட்கள், புதிய 15 இன்ச் அலாய் வீல்கள் போன்றவை காருக்கு அழகை கொடுக்கிறது.கவர்ச்சிகரமான பாடி லைன்கள் , புதிய டெயில் லைட்கள் ஆகியவை கார்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. புதிய மாருதி சுஸுகி செலிரியோ காரின் டிசைன் கவர்ச்சிகரமாக உள்ளதை பார்க்க முடிகிறது.

புதிய மாடலானது பழைய மாடல் காரை காட்டிலும் அகலமாக காணப்படுகிறது. புதிய காரில் கதவை திறக்கும் கோணம் சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது. கதவை திறக்கும் கோணம் சற்று மாறுவதால் காருக்குள் ஏறுவதும் இறங்குவதும் எளிதாக உள்ளது.

மிகப்பெரிய அளவில் அப்டேட் செய்யப்பட்டுள்ள புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ காரின் டேஷ்போர்டு லேஅவுட் மிகவும் அழகாக உள்ளது. எடுப்பான தோற்றம் அளிக்கும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. டேஷ்போர்டின் பக்கவாட்டில் வட்ட வடிவ ஏர் வெண்ட்கள் மற்றும் மைய பகுதியில் செங்குத்தான ஏர் வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் புதிய மாருதி சுஸுகி பெற்றுள்ளது. இது ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றை சப்போர்ட் செய்யும். ஸ்டியரிங் வீலில் பல்வேறு கண்ட்ரோல்களுக்கான ஸ்விட்ச்கள் இந்த காரில் உள்ளன.

6 வண்ணங்களில் புதிய மாருதி சுஸுகி செலிரியோ கார் கிடைக்கிறது. சிகப்பு, நீலம் ஆகியவை புதிய வண்ணங்கள் ஆகும். அதிக வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இவை இறக்கப்பட்டன.

இந்த காரில் புதிய கே10 (K10) இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு 26.68 கிலோ மீட்டர் மைலேஜை தருகிறது. இதன் மூலம் எரிபொருள் சிக்கனத்தில் இந்தியாவிலேயே தலைசிறந்த பெட்ரோல் கார் என்ற பெருமையை இது பெறுகிறது.

பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக இருக்கும் இன்றைய காலத்தில் இது மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். இந்த காரின் இன்ஜின் அதிகபட்சமாக 65 பிஹெச்பி பவரையும் உருவாக்க கூடியது. ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகளில் இது முக்கியமான ஒன்றாக உள்ளது.

புதிய மாருதி சுஸுகி செலிரியோ காருக்கு ஏற்கனவே முன்பதிவு செய்து வருகிறார்கள். 11 ஆயிரம் ரூபாயை முன் பணமாக செலுத்தி இதனை புக்கிங் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் அரேனா டீலர்ஷிப்கள் மூலமாக புதிய செலிரியோ காரை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

டாப் வேரியண்ட்டின் விலை 6.94 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையானது சவாலான விலையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here