வோக்கா சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்கள்

0
64

வோக்கா

நாகாலாந்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது வோக்கா. பழங்குடி பிரிவினரான லோதாக்கள் இங்கு அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.

மலை பகுதிகள்

1876-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் நாகா மலைகள் மாவட்டத்தின் தலைமையகமாக அஸ்ஸாமின் கீழ் கொண்டு வந்துள்ளனர். வோக்கா ஏராளமான மலைகள் , மலைமுகடுகளால் சூழப்பட்டுள்ளது. அழகிய இயற்கைக்காட்சிகள் நிறைந்து கண்கவர் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

அன்பான பழங்குடியினர்

வடக்குப்புறத்தில் மோக்கோக்சங் , கிழக்குப்புறத்தில் சூன்ஹேபோட்டோ, மேற்குப்புறத்தில் அஸ்ஸாம் சூழப்பட்டுள்ளது. வோக்கா சுற்றுலாப் பயணிகளை நட்போடு வரவேற்று மனதார அரவணைக்கின்றது.

விழாக்கள்

இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களான டோக்கு, பிக்குச்சாக் போது மட்டும் தான் சிறந்த உள்ளூர் நடனம் , இசை ஆகியவற்றை கண்டு ரசிக்க இயலும். பல தலைமுறைகளாக வழி வழியாகக் கற்பிக்கப்பட்டு வரும் கைவினை தொழில்நுட்பத்தின் மூலம் சால்வைகளை தயாரிக்கிறார்கள். இங்கு தயாராகும் சால்வைகளுக்கு இந்நகரம் மிகவும் சிறப்பு பெற்றது.

ஆவண சீட்டு

வோக்கா நகரம், தியி சிகரம் , டொயாங் நதி போன்ற பல சுற்றுலா ஈர்ப்புகளை கொண்டுள்ளது. இந்தியக் குடிமக்கள், நாகலாந்து மாநிலத்திற்குள் செல்ல வேண்டுமென்றால் உட்புற அனுமதிச்சீட்டு வாங்க வேண்டும். இந்த ஆவணத்தை கொல்கத்தா ஷில்லாங்கில் உள்ள நாகலாந்து இல்லத்தில் பெற்றுக்கொள்ளலாம். சுற்றுலாப் பயணிகள் இவ்வனுமதிச் சீட்டை திமாப்பூர், கோஹிமா ஆகிய நகரங்களின் கமிஷனருக்கு ஆவண செய்து பெற்றுக் கொள்ளலாம்

tourist place

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நதிநீர்

இங்கு டொயாங் நதிநீர் திட்டம் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் ஒரு இடமாகத் திகழ்கிறது. வோக்காவிலிருந்து சுமார் 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணை பார்க்கும்போது உங்கள் உடலில் அட்ரினலினின் சுரப்பு அதிகரிப்பதை உணர்வீர்கள். அதீதக் கிளர்ச்சியூட்டும் சுற்றுலாத்தலங்களுள் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகமேயில்லை. அடர்ந்த காடுகளின் வழியே நடைப்பயணம் செய்து நீர்த்தேக்கத்தை அடையலாம். செல்லும் வழியில் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை நீங்கள் காணலாம்.

அதிர்ஷ்டம்

உள்ளூரில் உலவும் செவி வழிக் கதைகளின் படி, ஒரு காலத்தில் மலைச்சிகரத்தில் இருந்த தோட்டத்தை அதிர்ஷ்டம் உள்ளவர்களால் மட்டுமே காண முடிந்ததாகக் கூறப்படுகிறது. ரோடோடென்ரான்கள் இந்த சிகரம் எங்கும் படர்ந்து தோற்றமளிக்கிறது. லோதாக்கள், இவ்விடத்தை தங்கள் முன்னோர்களுடைய ஆன்மாக்களின் உறைவிடமாகப் போற்றுகின்றனர். மலைச்சிகரத்தில் இருந்து பார்த்தால் கிராமங்கள் மற்றும் பள்ளத்தாக்கு, பச்சைத் தூரிகையில் வரையப்பெற்று வண்ணம் தீட்டப்பட்டது போல் காட்சியளிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here