ஹெல்மெட் அணியாத காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!

0
61
helmet

வழக்குகள்

கடந்த ஆண்டு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அபராதம் விதிக்கும் போலீசார் சிலர் பணியின்போது ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

உத்தரவு

இதனை தடுக்கும் நோக்கில் கமிஷ்னர் போலீசாருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்படி ஹெல்மெட் அணியாமல் போலீசார் இருச்சக்கரவாகனங்கள் ஓட்டக்கூடாது. சிறப்பு பிரிவு போலீசார் உட்பட அனைவருக்கும் இது பொருந்தும் என்றும், மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

அறிக்கை

வழக்குப்பதிவுக்கு உள்ளாகும் போலீசார் குறித்த அறிக்கையை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விபத்தில்லா மதுரையை உருவாக்க கமிஷ்னரின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here