ஹைபிரிட் வாகன உற்பத்தி குறித்து அமைச்சர் கட்கரி தகவல்!

0
53
katkari

அமைச்சர்

எரிபொருள், பேட்டரி என இரு வகையிலும் செயல்படும் ஹைபிரிட் வாகனங்களை உற்பத்தி செய்யுமாறு நிறுவனங்களை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

தரம்

திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் இந்தியாவில் பெட்ரோலிய பொருள்களின் இறக்குமதியை குறைக்கும் வகையில் ஹைபிரிட் வாகனங்களை உற்பத்தி செய்யுமாறு கார் தயாரிப்பு நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுள்ளது. இந்த கார்கள் பிஎஸ் -6 தரத்துடன் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

உற்பத்தி

கரியமில வாயு வெளியேற்றமும் இதனால் குறைகிறது. இந்த வகை வாகனங்கள் பல பிரிவுகளில் உள்ளதால் 100 சதவீதம் எத்தனால் மூலம் இயக்கும் வகையிலும் உற்பத்தி செய்ய முடியும்.

நன்மை

இந்த வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் போது நாட்டின் பொருளாதாரத்துக்கும் நன்மைகள் மற்றும் விவசாயிகளுக்கு நேரடியாக வருவாய் கிடைக்கும். கச்சா எண்ணெய் குறைவதால் அந்நிய செலவாணி கையிருப்பு அதிகரித்து புதிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here