1,600 போலி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்த 3 பேர் கைது!

0
72
குற்றம்

தடை

தஞ்சை பகுதியில் உள்ள மார்க்கெட்டில் மதுபானங்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும் என டிஐஜி உத்தரவிட்டு இருந்தார். இதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடந்து வந்தது.

தகவல்

ஊரடங்கு, பொங்கல் பண்டிகையின் போது விற்பனை செய்வதற்காக போலி மதுபானங்களை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து பதுக்கி வைத்ததாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது.

சோதனை

டிஐஜி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார், மகேந்திரன், விஜய், சுந்தர்ராமன் ஆகியோர் ஒரு குடோனில் சோதனை நடத்தினர்.

கைது

1,600 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்த கமல் உட்பட மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 வாகனங்களை பறிமுதல் செய்ததோடு குடோனுக்கும் போலீசார் சீல் வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here