200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது

0
48

விசாரணை

சுகேஷ் சந்திரசேகர் புதுடில்லியில் உள்ள தொழிலதிபரின் மனைவியிடம் இருந்து 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைதாகியுள்ளார். துறை விசாரணையின் போது பாலிவுட் நடிகைகளான ஷில்பா ஷெட்டி, ஷ்ரத்தா கபூர் ஆகிய பலருடன் தொடர்பில் இருந்ததை ஒப்புக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

லஞ்சம்

சுகேஷ், சந்திரகேகர் என்ற இருவரும் இரட்டை இலை சின்னத்தை தினகரனுக்கு தருவதாக கூறி தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் தர முயன்ற போது கைது செய்யப்பட்டு டில்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறை

சுகேஷ் மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளது. சுகேஷ் சிறையில் இருந்தபோது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் இருவருடன் சுகேஷுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களது மனைவிகளிடம் இவர்களுக்கு ஜாமின் வாங்கிதருவதாக கூறி உயர் அதிகாரிகளை போல் பேசி 200 கோடி ரூபாய் வரை பணம் பறித்துள்ளார். இந்த பணத்தை பல்வேறு நாடுகளில் போலி நிறுவனங்களை துவங்கி முதலீடு செய்துள்ளார்.

பணபரிமாற்று மோசடி

பணபரிமாற்று சட்டத்தின் கீழ் சுகேஷ் சந்திரசேகரை அதிகாரிகள் கைது செய்தனர். இவர் நடிகைகளான ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி ஆகியோருக்கு 10 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசு பொருட்களை அளித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் கைதாகி சிறையில் இருந்தபோது ஜாமின் பெற்று தருவதாக ஷில்பாவை தொடர்பு கொண்டு சுகேஷ் பேசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதை மருந்து வழக்கு

நடிகை ஷ்ரத்தா கபூரை 2015ல் இருந்தே எனக்கு தெரியும் என்றும் அவர் போதை மருந்து வழக்கில் சிக்கியபோது அவருக்கு உதவியதாகவும் விசாரணையில் சுகேஷ் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் நடிக்கும் “கேப்டன் இந்தியா” என்ற படத்தை சேர்ந்து தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் விசாரணையில் சுகேஷ் அதிகாரிகளிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here