2021-ம் ஆண்டு வனவிலங்கு சரணாலயங்களில் இருந்த 23 புலிகள் இறப்பு!!

0
57
புலி

வண்டலூர் பூங்காவில் 9 புலிகள் இறந்துள்ளன. அதே நேரத்தில் 2014 முதல் 2017 வரையிலான 4 ஆண்டுகளை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் புலியின் இறப்பு குறைந்துள்ளன.

வனவிலங்கு

தமிழ் நாட்டில் வனவிலங்கு சரணாலயங்களில் இருந்த 23 புலிகள் இறந்துள்ளன. 2 புலிகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டன. ஒரு புலி மின்சாரம் தாக்கியதால் இறந்துள்ளன.இது தொடர்பாக தேசிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2021ல் முதுமலை புலிகள் காப்பகத்தில் 3 புலிகள் இறந்தது தெரியவந்தது. 2020ல் சத்தியமங்கலத்தில் மொத்தம் 8 புலிகளும் 2018 ல் 6 புலிகளும் 2019 ல் 8 புலிகளும் இறத்துள்ளன .

அரசு

புலிகள் இறப்பதை குறைப்பதற்கு மாநில அரசுகள் அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல முயற்சியை மேற்கொண்டதாகவும் வன சரக்க காப்பகம் மற்றும் வனவிலங்கு காப்பக ஆணையர் தெரிவித்துள்ளார்.

பாதுகாவலர் தலைவர்

அதே போல சில ஆண்டுகளில் வனவிலங்கை பாதுகாக்கும் பணி இருப்பதாகவும் விலங்குகள் வேட்டையாடப்படுதல் குறைந்து இருப்பதாகவும் இயற்கை பாதுகாவலர் தலைவர் பாராட்டியுள்ளார். இருந்தாலும் புதிய தொழில்நுட்ப பயன்பாட்டிற்காக வனத்துறைக்கு அரசு கூடுதல் பணம் ஒதுக்கும் வகையில் வனவிலங்குகளின் இறப்பு தடுக்கப்படும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here