2022 ம் ஆண்டுக்கான ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கும் கல்வி உதவி தொகை அறிவிப்பு!

0
68
relaiyance

கல்வி உதவித்தொகை

2022 ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவது குறித்த அறிவிப்பினை ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த உதவி தொகையை பெறுவதற்கான தகுதி இருப்பின் நீங்கள் விண்ணப்பிக்கலாம். நடப்பாண்டில் 76 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் தகுதி

செயற்கை நுண்ணறிவு, கணினி அறிவியல், கணிதம் போன்ற பட்டப்படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் யூஜி, பிஜி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ. 4 லட்சம்

அதிகபட்சமாக 60 பேர் உதவித் தொகை பெறுவதற்கான வாய்ப்பினை பெறுவார்கள். இளங்கலை மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. முதுகலை மாணவர்கள் 40 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும்.

முகவரி

தகுதியுடையோர் https://www.scholarships.reliancefoundation.org/ என்ற இணைய தளத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பல்துறை வல்லுநர்கள் மூலமாக துறைகளில் திறமையானவர்களாக உருவாக பயிற்சி அளிக்கப்படும். போட்டி தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்ய படுவார்கள். தேசிய அளவில் திறமை வாய்ந்தவர்கள் மாணவர்களை தேர்வு செய்வார்கள்.

நோக்கம்

உலகத்தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை ரிலையன்ஸ் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் ரிலையன்ஸ் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here