2025-ல் நடக்கும் போட்டி – இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க

0
80
cricket sports selection india pakisthan

பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை நடத்த ஐசிசி அனுமதி அளித்துள்ளது. இது 2025 இல் நடைபெறும் அதற்குள்ளாகவே ஆரம்பித்து விட்டார்கள் பாதுகாப்பு இருக்குமா என்ற விவாதங்களை தொடக்கி உள்ளனர்.

மத்திய அமைச்சரான அனுராக் தாக்கூர் கூறுவது, பாதுகாப்பு அம்சங்களை அரசு மதிப்பாய்வு செய்த பின்னரே இந்திய அணி செல்லுமா என முடிவெடுப்பார்கள் என்றார்.

கடந்த காலத்தில் பல நாடுகள் பாகிஸ்தான் செல்லாமல் விலகியுள்ளன என அவர் கூறியுள்ளார். அங்கு பாதுகாப்பான சூழ்நிலை இல்லை எனவும், அணிகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன எனவும் கூறியுள்ளார். மேலும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவெடுக்கும் என்று அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் 2008ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி விளையாடவில்லை. கடைசியாக இந்திய அணி 2005-2006 ல் ராகுல் திராவிட் கிரெக் சாப்பல் கோச் ஆக இருந்த போது ஆடியது. பிறகு இருநாடுகளுக்கும் இடையே அரசியல் கருத்து வேறுபாடுகள் நடந்ததால் பாகிஸ்தான் இங்கு வந்து ஆடியது.

2011 உலககோப்பை கிரிக்கெட்டுக்கு ஆட இந்தியா வந்தது பாகிஸ்தான். 2016 டி 20 கிரிக்கெட் தொடரில் ஆட மீண்டும் இந்தியா வந்தது.

  1. 2024 டி20 உலகக் கோப்பை – அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்
  2. 2025 சாம்பியன்ஸ் டிராபி – பாகிஸ்தான்
  3. 2026 டி20 உலகக் கோப்பை- இந்தியா, இலங்கை
  4. 2027 ஒரு நாள் உலகக் கோப்பை- தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா
  5. 2028 டி20 – உலகக் கோப்பை – ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
  6. 2029 சாம்பியன்ஸ் டிராபி- இந்தியா
  7. 2030 டி20 உலகக் கோப்பை – இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து
  8. 2031 கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியா, பங்களாதேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here