4 பேர் ஏரியில் குதித்ததில் தாய், மகள், மருமகன் உயிரிழப்பு!

0
70

ராமநகர்

ராமநகர் மாவட்டம் சோலூரு பகுதியில் வசித்து வரும் சித்தம்மா வயது 55. இவரது மருமகள் ஹனுமந்தராஜூ வயது 35. மகள் சுமித்ரா வயது 30 ஆகும். பேத்தி கீர்த்தனா வயது 10 ஆகும். இவர் விவசாய கூலி தொழில் செய்பவர்.

ஏரி

இவர்கள் நான்கு பேரும் கிராமத்தையொட்டி உள்ள ஏரிக்கு சென்றுள்ளனர். அங்கு தீடீரென அனைவரும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் ஏரியில் குதித்துள்ளனர்.

உயிரிழப்பு

உடனடியாக அங்கு உள்ள சில இளைஞர்கள் ஏரியில் குதித்து அவர்களை காப்பாற்ற முடிவு செய்துள்ளனர். அவர்களால் சிறுமியை மட்டுமே காப்பற்ற முடிந்துள்ளது. மற்ற 3 பேரும் மூழ்கி பரிதாபமாக உயிரை இழந்துள்ளனர்.

சிகிச்சை

தீயணைப்பு படையினருடன் வந்த போலீசார் அவர்களின் உடல்களை மீட்டனர். அவர்களது உடல் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. சிறுமி கீர்த்தனாவை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வருத்தம்

எதற்காக தற்கொலை செய்தார்கள் என்பது தெரியவில்லை என கூறுகிறார்கள். அப்பகுதியில் இந்த தற்கொலை சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here