5 Lucky zodiac signs best benefits by Guru Uthaya! : குரு உதயத்தால் சிறந்த நற்பலன்களை அடைய போகும் 5 அதிர்ஷ்ட ராசிகள்!

0
302

ஜோதிடம்

ஜோதிடத்தின் படி, ஒருவரின் ஆளுமை, நிகழ்காலம், அதிர்ஷ்டத்தை கணிக்க ஜாதகங்கள் முக்கியமாக பயனுள்ளதாக இருக்கும். சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய நீங்கள் தேர்வு செய்யக்கூடிய விஷயங்கள் உங்களின் ராசி பலன்களை வைத்து கணிக்கப்படுகிறது. இவ்வாறு கணிக்கப்படுவது சிலருக்கு சந்தோஷத்தை கொடுக்கும், சிலருக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

குருபகவான்

நான்காம் ராசியில் உச்சம் பெற்று பத்தாம் ராசியில் செல்ல இருக்கிறார். குரு பகவான் மார்ச் 27 ஆம் தேதி மீண்டும் ராசியில் உதயமாக உள்ளது. வியாழன் உதயத்தால் இந்த 5 ராசிகளுக்கு ஒளிமயமான வாழ்க்கை அமையும்.

மேஷம்

உங்கள் ராசியில் வியாழன் பன்னிரண்டாவது வீட்டில் உள்ளதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால் உங்களுக்கு லாபம் வரும். நீங்கள் வேலையில் இருந்தால், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. வீடு வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் எதிர்காலமானது பிரகாசமாக இருக்கும்.

கடகம்

உங்கள் ராசியில் வியாழன் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. புதிய வேலையை பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. முதலீடு செய்ய நல்ல நேரமாக இருந்தாலும் வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்

வியாழன் உங்கள் ராசிக்கு ஐந்தாவது இடத்தில் இருப்பதால் தொழிலில் பெரிய பதவியை பெறலாம். புதிய வேலைவாய்ப்பு கிடைப்பதோடு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். போட்டி தேர்வுகளில் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் வரும். குழந்தை பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும்.

தனுசு

வியாழன் உங்கள் ராசியின் நான்காம் வீட்டில் உதயமாவதால் தனுசு ராசிக்காரர்களின் பணமும், புகழும் அதிகரிக்கும். பதவி, கெளரவம், தொழிலில் முன்னேற்றம் போன்றவை கிடைக்கும். புதிய வேலைகள் தேடுபவர்கள் வேலையை பற்றி நன்கு அறிந்த பிறகே முடிவினை எடுங்கள். உங்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.

மிதுனம்

வியாழன் உங்கள் ராசிக்கு பதினோராம் வீட்டில் உதயமாவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு மாத காலம் வெற்றிகள் கிடைக்கும். பதவிகள், புதிய வேலைவாய்ப்பு, தடைபட்ட வேலைகள் என பல நன்மைகள் கிடைக்கிறது. வியாபாரிகள் லாபம் பெறவும், பதவி உயர்வினை அடையவும், பணம் சாதகமாக இருக்கும் நேரமாகவும் உங்களுக்கு அமைகிறது. தடைபட்ட திருமண காரியங்கள் விரைவில் உங்களுக்கு நடக்க உள்ளது. அதிஷ்டத்தின் முழு பலனையும் நீங்கள் பெறுவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here