6 சிறந்த 125சிசி ஸ்கூட்டர் மாடல்கள்

0
55
  1. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சிறந்த 125சிசி மாடலாக இது உள்ளது. இதில் வழங்கப்படும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.7 பிஎச்பி பவரை கொண்டுள்ளது. ஐ3எஸ் ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பம், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை இதில் காணப்படுகிறது.

maestro edge 125cc bike
  1. சுஸுகி அக்செஸ் 125

இந்தியாவின் 125சிசி மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக சுஸுகி அக்செஸ் உள்ளது.டிசைன், தொழில்நுட்பத்தில் சில மாற்றங்களுடன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் சந்தையில் இருந்து வருகிறது. இந்த ஸ்கூட்டரில் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதால், எஞ்சின் அதிகபட்சமாக 8.58 பிஎச்பி பவரையும் , 10.2 ஏன்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

access 125cc
  1. வெஸ்பா யுசி 125

இந்திய சந்தையில் மிகவும் சிறந்த அம்சங்கள் கொண்ட மாடலாக வெஸ்பா யுசி 125 ஸ்கூட்டர் இருந்து வருகிறது. இதில் இருக்கும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 9.5 பிஎச்பி பவரையும், 9.9 என்எம் டார்க் திறனையும் கொண்டுள்ளது. இரு சக்கரங்களுக்கும் ஒருங்கிணைந்த வகையில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் இந்த ஸ்கூட்டர் தனி வாடிக்கையாளர் வட்டத்தை பெற்றுள்ளது.

vespa uc 125cc
  1. ஹோண்டா ஆக்டிவா 125

இது ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் அதிக மதிப்பை வழங்குகிறது. அனைவரையும் கவரும் டிசைன், சிறந்த எஞ்சின்களுடன் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும்.124.9சிசி எஞ்சின் இருப்பதால் 8.52 பிஎச்பி பவரும், 10.54 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இது லிட்டருக்கு 60 கிலோமீட்டர் மைலேஜை வழங்குகிறது.

honda activa
  1. ஹோண்டா கிரேஸியா

இளைஞர்களை கவரும் வகையில் அசத்தலான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வில் ஹோண்டா கிரேஸியா உள்ளது. 124.9சிசி எஞ்சின் இருப்பதால் அதிகபட்சமாக 8.52 பிஎச்பி பவரையும், 10. 54 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது.சிறந்த மதிப்பை வழங்கும் மாடலாக அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.

honda grazia
  1. டீவிஎஸ் என்டார்க் 125

மிகவும் சிறப்பான டிசைன், தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவற்றை கொண்டு இளைனர்களை கவரும் விதமாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்த முதல் மாடலாக உள்ளது. 124.79சிசி எஞ்சின் இதில் உள்ளதால், அதிகபட்சமாக 9.2 பிஎச்பி பவரும், 10.5 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது.எல்இடி ஹெட்லைட், புளூடூத் இணைப்பு வசதி, ஜபிஎஸ் நேவிகேஷன் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் உள்ளது. இதன் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

tvs ntorq

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here