Tirupati Temple திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசிக்க 90 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி:

0
42
திருப்பதி ஏழுமலையான் கோவில்:

கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசிக்க 90 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ‘வி.ஐ.பி.., பிரேக்’ தரிசனத்தை ரத்து செய்து தர்ம தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் வார இறுதியில் 70 ஆயிரத்தை கடந்துள்ளது. கோவிலில் தரிசிக்க டிக்கெட் முன்பதிவு செய்தவர் மட்டுமே கோவிலில் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்களின் எண்ணிக்கை:

இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் காத்திருப்பு அறையில் 19 அறைகளிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர். இவர்களுக்கு உணவு, குடிநீர் போன்றவை வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நிலவரப்படி 90 ஆயிராத்து 885 பக்தர்கள் தரிசித்தனர். இதில் 35 ஆயிரத்து 707 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

பக்க்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவில் 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி 12 மணி அளவில் நடை மூடப்படுகிறது. தரிசனத்திற்காக அனுமதித்துள்ள பக்க்தர்கள் 24 மணி நேரமும் அலிபிரி நடை பாதை வழியாகவும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஸ்ரீவாரி மொட்டு நடை பாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here