Actress Chetna Raj நடிகை சேத்தனா ராஜ் இறந்து விட்டாரா! நடந்தது என்ன?

0
58

நடிகை சேத்தனா ராஜ்

நடிகை சேத்தனா ராஜ் சிறந்த ஒரு நடிகை இவர் தற்போது கன்னட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் மிகவும் பிரபலமான ‘தொரேசானி’ ‘கீதா’ போன்ற தொடர்களில் நடித்து வந்தார். இவருடைய உடல் பருமனாக இருப்பதால் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் இவர் தொடர்களில் நடித்து வந்தார்.

நடிகை சேத்தனா ராஜ் மருத்துவமனையில் அனுமதி :

இவர் தன்னுடைய உடல் பருமனை குறைப்பதற்காக உடலில் இருக்கும் கொழுப்பை நீக்க வேண்டும் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படடார். இவருக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை நடந்து கொண்டியிருக்கும் போது தீடிரென சேத்தனாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது .

உடனே இவருக்கு சிகிட்ச்சை அளித்து வந்த டாக்டர் மெல்வின், அருகில் உள்ள காடே மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பயனளிக்காமல் பரிதாபவமாக இறந்து விட்டதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாக்டர் மெல்வின் மீது குற்றச்சாட்டு:

மேற்கொண்டு காடே மருத்துவமனை டாக்டர், போலீசாருக்கு அளித்துள்ள புகாரில் நடிகை சேத்தனாவை மருத்துவமனைக்கு அழைத்து வந்த டாக்டர் எங்களை சேத்தனா வுக்கு சிகிச்சை அளிக்கும் படி மிரட்டினார். மருத்துவ மனைக்கு அழைத்து வரும்போதே அவர் இறந்திருப்பாரோ என்று எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவருக்கும் அந்த சந்தேகம் இருந்ததினால் தான் எங்களை அறுவை சிகிச்சை செய்ய வற்புறுத்தினார் என காடே மருத்துவமனை டாக்டர் புகார் அளித்துள்ளார்.

மேலும் அவர் இது போன்ற டாக்டரை கடுமையாக கண்டிக்கிறோம் என்றும், நடிகை சேத்தனா ராஜ் சாவில் எதோ தவறு நடந்திருக்கிறது என்றும் புகார் அளித்துள்ளனர்.

தொலைக்காட்சிகளில் பெரும் பரபரப்பு:

இந்த சம்பவத்தை அடுத்து நடிகை சேத்தனா வின் தந்தை கூறுகையில் எனது மகள் உடல் பருமனை குறைக்க என்னிடம் 1 லட்சம் வேண்டும் என்று கடந்த ஒருமாதமாக கேட்டுள்ளார். நாங்கள் கொடுக்க மறுத்ததால் எங்களுக்கு தெரியாமல் நண்பர்களின் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அப்போது தான் மாரடைப்பால் எனது மகள் இறந்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக நான் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுள்ளேன். இந்த சம்பவம் குறித்த தகவல்கள் தொலைக்காட்சிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here