Tamil News கூட்டு பலாத்காரம் செய்த வாலிபர்கள் கைது ; போலீசார் தீவிர விசாரணை:நடந்தது என்ன?

0
54

ராமேஸ்வரம் மாவட்டம்:

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த வடகாடு என்னும் ஊரில் 45 வயது மதிப்புடைய பெண் ஒருவர் நேற்று முன் தினம் கடல் பாசி எடுப்பதற்காக சென்றுள்ளார். அந்த பெண் மாலை வரை வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேட தொடங்கியுள்ளனர். மேலும் அந்த பெண் மாயமானது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

போலீசார் அந்த பெண்ணை தேட தொடங்கினார். அப்போது கடற்கரையை ஒட்டிய பகுதியில் பெண் ஆடைகள் இல்லாமல் பிணமாக கிடந்தார். இதை அடுத்து போலிசார் அந்த இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீ ட்டு வந்துள்ளனர். அப்போது அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்றதாகவும் பெட்ரொல் வைத்து எரித்து கொன்றதாகவும் தெரிவந்தது.

போலீசாரின் தீவிர விசாரணை:

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு செயல் பட்டு வரும் இறால் பண்ணையில் பணிபுரியும் ஒடிசா மாநில வாலிபர்கள் மீது விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அங்கு நின்ற பொது மக்களும் அவர்கள் 6 பேரையும் தாக்கினர். பண்ணையின் முன்பகுதியில் இருந்த பொருட்களுக்கு தீ
வைத்தனர்.

இச்சம்பவத்தை அடுத்து வாலிபர் 6 பேரையும் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பெண் கடல் பாசி சேகரித்து விட்டு தனியாக வரும்போது நாங்கள் வழி மறித்து அந்த பெண்ணை துக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தோம் என்று கூறியுள்ளனர். இந்த 6 வாலிபரகளையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களை பொது மக்கள் தாக்கியதால் 6 பெரும் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பொதுமக்கள் இவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் பெண்ணின் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இவர்கள் 6 பெரும் ஆஸ்பத்திரியில் இருப்பதால் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை. சிகிட்ச்சை முடிந்ததும் இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here