Manmadhaleelai movie! : மன்மதலீலை படம் குறித்து அசோக்செல்வன் பேட்டி!

0
47

ஓடிடி

ஓடிடிக்கு என எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஏப்ரல் முதல் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கதை ரசிகர்களுக்கு பிடிக்கும் என அசோக் செல்வன் கூறுகிறார்.

வெங்கட்பிரபு

வெங்கட்பிரபு படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன் என்றும், வித்தியாசமான கதைகள் செய்ய ஆசை என்றும் கூறினார். ஒரு நடிகராக என்ன முயற்சி செய்ய முடியும் என்பதை நோக்கி போய் கொண்டிருக்கிறேன். அவருடன் இணைந்து வேலை பார்க்க நல்ல வாய்ப்பு என்று கூறுகிறார்.

கமல்ஹாசன்

கடந்த 1976 ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஒரிஜினல் மன்மதலீலை படம் மிகவும் பிடிக்கும். அந்த காலகட்டத்திற்கு அந்த கதையை முற்போக்காக யோசித்து எடுத்திருக்கிறார்கள்.

மன்மதலீலை

நான் நடித்திருக்கும் இந்த மன்மதலீலை கதையானது திருமணம் தாண்டிய உறவு வைத்துள்ள மன்மதனை பற்றிய கதை ஆகும். கதைக்கான எதிர்பார்ப்பு தலைப்பில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.

சிரிப்பு

நாங்கள் இருவரும் படப்பிடிப்பு முடியும் வரை சிரித்து கொண்டே தான் இருப்போம். இந்த படத்தினை நினைத்தாலே சிரித்து மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் நினைவுக்கு வருகிறது. கடைசியில் இடம்பெற்றுள்ள நான் பொய் சொல்லி மாட்டி கொள்ளும் காட்சி படமாக்கும் போது மொத்த யூனிட்டுமே சிரித்து கொண்டேதான் இருந்தார்கள்.

பாராட்டு

இந்த படத்திற்காக நிறைய பேர் வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக அர்ஜுன் சாருடைய பாராட்டு மறக்க முடியாதது. அவர் மன்மதலீலை ட்ரைலர் பார்த்து எப்போது ரிலீஸ் என கேட்டது ஆச்சரியமாகவும், சந்தோசமாகவும் இருந்தது.

கமல், சிம்பு

நிச்சயமாக கமல் தான் நடிகராக தேர்தெடுப்பேன். அவருடைய மிகப்பெரிய ரசிகன் என்றும், இந்த கதைகளில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அவரை தவிர சிம்பு நடித்தாலும் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என கூறினார்.

மீம்ஸ்

மீம் கிரியேட்டர்கள் உண்மையாகாவே சிறப்பாக இருந்தது. இந்த படத்திற்கு நிறைய மீம்ஸ் பகிர்ந்து இருந்தார்கள். பள்ளிக்கூடத்தில் கமல்ஹாசன், சிம்பு, தனுஷ் அவரை வரவேற்று வா தம்பி வந்து பக்கத்துல உக்காரு என அழைக்கும் மீம்ஸ் சிறப்பாக இருந்தது.

யாருடன் இணைய விருப்பம்?

முதலில் எனக்கு கமல் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும். நளனுடன் மீண்டும் இணைய வேண்டும், இதில் இயக்குனர் வெற்றிமாறனும் உண்டு. அனைத்து இயக்குநர்களுடனும் நடிக்க விரும்பும் நடிகன் என அசோக்செல்வன் கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here