Audio released about the tragedy in Ukraine! : உக்ரைன் துயரம் குறித்து வெளியான ஆடியோ!

0
61

குண்டு

உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் 20 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த போர் தாக்குதலின் ஆரம்பம் உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் நகரத்தை ரஷ்யா கடுமையாகவும், தொடர்ச்சியாகவும் தாக்கி வருகிறது.

ஆடியோ

இந்தத் தொடர் தாக்குதலில் அந்நகரத்தில் 2,000-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உக்ரைனில் வசிக்கும் அன்னா ரோமானிகோ என்ற பெண் பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

மரியுபோல்

அன்னா ரோமானிகோ மரியுபோல் நகருக்கு வெளியே வசித்து வருகிறார். அவரின் பெற்றோர் மரியுபோல் நகரில் சிக்கியுள்ளனர். தற்போது தொடர்ச்சியாக நடைபெறும் தாக்குதலால் அங்கு ஏற்படும் அவல நிலையை அவரது ஆடியோவில் விவரிக்கிறார்.

அன்னா கூறியவை

கடந்த 10 மணி நேரமாக ரஷ்ய படைகள் அங்கு குண்டுவீசி வருகின்றனர். அங்கு வீடுகளின் வெப்பநிலை 4,5 டிகிரி செல்சியஸாக உள்ள நிலையில், நகரில் தண்ணீர், உணவு, மின்சாரம் எதுவும் இல்லை. வீட்டினை சூடேற்றவும் வழியில்லை.

வசதி

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பெற்றோர்களால் என்ன செய்ய முடியும்? கடைகள் அங்கு நேற்று வரை மட்டுமே திறந்திருந்தன. நகரின் சில பகுதிகளில் மட்டுமே தொலைத்தொடர்பு வசதி உள்ளதால் அங்குள்ளவர்கள் வெளியுலகை தொடர்புகொள்ள முடியாத அபாயமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மரியுபோல் நகரில் இருந்து வெளியேறி உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு செல்ல மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கார்

அப்படி வெளியேற உங்களிடம் காரும், பெட்ரோலும் இருக்க வேண்டும். போகும் வழிகளில் பெட்ரோல் நிரப்பிக்கொள்ள மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை, கார் இல்லாத மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். 21-ம் நூற்றாண்டில் இனப்படுகொலையின் சாட்சியாகவும், பலியாகவும் நானே மாறுவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here