WaterFall அருவியில் குளிக்க தடை: மாவட்ட ஆட்சியாளர் அறிவிப்பு …

0
56

ஒகேனக்கல் அருவியில் தொடர்ந்து வரும் மழைக்காரணமாக நீர்வரத்து அதிகமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை என மாவட்ட ஆட்சியாளர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு:

தொடர்ந்து வரும் மழைக் காரணமாக காவேரி ஆற்றிலும் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய விட இன்று 1000 கனஅடி அளவு நீர் வரத்து அதிகமாக காணப்படுவதால் அருவியில் குளிக்கவும் பரிசில் இயக்கவும் தடை விதிக்க பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here