Beast Movie Second Song Release Date Announced! : பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
111

பீஸ்ட்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரில் ஒருவராக திகழும் இளைய தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். இதில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும், இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இசை

இந்த பீஸ்ட் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகி உள்ள பீஸ்ட் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

ஏப்ரல்

சமீபத்தில் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளது. பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விஜய் பாடிய பாடல்

பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள பாடலான “ஜாலியோ ஜிம்கானா” வரும் 19 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது அவரது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடல்

பீஸ்ட் படத்தில் ஏற்கனவே முதல் பாடலாக “அரபிக்குத்து” வெளியாகி வைரலானது. தற்போது இரண்டாம் பாடலாக “ஜாலியோ ஜிம்கானா” வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here