BMW i4 Electric Car! : இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள BMW i4 எலக்ட்ரிக் கார் அம்சங்கள்!

0
61

பிஎம்டபிள்யூ ஐ4 கார்

இது இந்தியாவின் சொகுசு கார் பிரிவில் முதல் எலக்ட்ரிக் காராக இருக்கும். பிஎம்டபிள்யூ ஐ4 காரானது சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரண்டாவது எலக்ட்ரிக் கார் ஆகும்.

வடிவமைப்பு

BMW I4 காரானது, ஏரோ -ஆப்டிமைல்ஸ் சக்கரங்கள், ஃபிளஷ் கதவு கைப்பிடிகள், பின்புற பம்பர்கள், வெறுமையாக்கப்பட்ட முன் கிரில் போன்ற அழகிய வடிவமைப்புகளுடன் காணப்படுகிறது.

அம்சங்கள்

இந்த காரில் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், 14.6 இன்ச் டச்ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை காணப்படுகிறது. புதிய BMW i4 இந்தியாவில் இரண்டு விதமாக விற்பனை செய்யப்படுகிறது.

பேட்டரி

காரின் இரண்டு வகைகளிலும் தரையில் பொருத்தப்பட்ட லித்தியம் -அயன் பேட்டரி காணப்படுகிறது. இடிரைவ்40 மாறுபாடு 83.9kWH பேட்டரி, M50 xDrive மாறுபாடு 80.7kWh பேட்டரி உடன் வருகிறது. i4 இடிரைவ் 40 ஆனது ஒருமுறை சார்ஜ் செய்தால் 590 கிலோமீட்டர் வரை செல்லும். மற்றொரு வகை 510 கிலோமீட்டர் வரை செல்லும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here