Bollywood actor Shah Rukh Khan prank fans! : ரசிகர்களிடம் பிராங்க் செய்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான்!

0
41

அறிவிப்பு

சமீபத்தில் SRK+ என்கிற விளம்பரத்தை வெளியிட்டார் ஷாருக்கான். இதனை பார்த்த ரசிகர்கள் அது ஷாருக்கான் புதிதாக தொடங்க உள்ள ஓடிடி தளத்திற்கான அறிவிப்பு என கருதி வந்தனர்.

திரைப்படம்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படமானது ஜீரோ ஆகும். இந்த படமானது கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. இதன் பின்னர் 4 ஆண்டுகள் ஆகியும் இவரது படங்கள் வெளியாகவில்லை. இவரது நடிப்பில் தற்போது பதான் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

பதான்

பதான் படத்தை சித்தார்த் ஆனந்த் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவும், வில்லனாக ஜான் ஆபிரகாமும் நடித்து வருகின்றனர். பிரமாண்ட பொருட் செலவில் தயாராகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

லயன்

அட்லீ இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு லயன் என பெயரிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த படத்தினை குறித்து இதுவரை படக்குழுவோ, ஷாருக்கானோ எந்தவித அதிகாரபூர்வ அப்டேட்டும் வெளியிடவில்லை.

விளம்பரம்

பிசியாக வலம் வரும் ஷாருக்கான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் SRK+ என்கிற விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அது ஷாருக்கான் புதிதாக தொடங்க உள்ள ஓடிடி தளம் என கருதினர். அந்த விளம்பரமானது சிறப்பாக வைரலாகி வந்தது.

பிராங்க்

அதனை குறித்த உண்மை தகவல் வெளியான நிலையில், SRK+ என்பது ஓடிடி தளத்திற்கான அறிவிப்பு இல்லையாம். இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் விளம்பரம் ஆகும். இதனை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அஜய் தேவ்கன் ஷாருக்கான் அனைவரையும் பிராங்க் செய்ததாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here