Case that shocked the Supreme Court! : சுப்ரீம் கோர்ட்டை அதிரவைத்த கணவன் மனைவி வழக்கு!

0
94

திருமணம்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு அவரது மனைவிக்கு பெண்மை இல்லை என்று தெரிய வந்துள்ளது.

சிகிச்சை

மருத்துவ பரிசோதனை மூலம் இவை கண்டறியப்பட்டது. அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அந்த பெண் கர்ப்பம் தரிப்பது சாத்தியமற்றது என டாக்டர்கள் மூலம் அவர் அறிந்தார்.

uchaneethimantram 5

தந்தை

அவரது மனைவியை அழைத்து செல்லுமாறு அந்த பெண்ணின் தந்தையிடம் அவர் கூறினார். அந்த பெண்ணின் தந்தை கேட்கவில்லை. அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

uchaneethimantram 4

மனு

தனது மனைவி பெண் அல்ல என்றும், இதனால் அவருக்கு விவாகரத்து அளிக்க வேண்டும் என்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள கீழ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவினை கோர்ட் தள்ளுபடி செய்தது.

சுப்ரீம் கோர்ட்

மத்திய பிரதேச ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29 ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

uchaneethimantram 2

உத்தரவு

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எம் சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர். இதனை தொடர்பாக மனைவி பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here