Cinema News 2022 : சர்தார் படப்பிடிப்பு திடீர் நிறுத்ததால் கவலையடையும் படக்குழு!

0
45
sarthaar

கார்த்தி

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் , விருமன் ஆகிய படங்களில் நடித்து வரும் கார்த்தி அதனை தொடர்ந்து பிஎஸ் மித்ரனின் சர்தார் படத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு

இந்த படத்தில் இரு வேடங்களில் நடிக்கும் கார்த்தி ஒன்றில் இளமையாகவும், ஒன்றில் முதுமையாகவும் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் கார்த்தி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பது தெரியவந்தது.

நடிப்பவர்கள்

இந்த படத்தில் ராஷி கண்ணா நாயகியாக நடிக்கிறார். சிம்ரன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இடையில் சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் தொடங்கியது.

புகைப்படம்

கார்த்தி வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானதை வைத்து அப்பா, மகனாக நடிப்பதாக கூறப்பட்டது.

ஒளிப்பதிவாளர்

படத்தின் ஒளிப்பதிவாளரான ஜார்ஜ் சி. வில்லியம்ஸுக்கு கொரோனா தொற்றால் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது படக்குழுவை கவலையடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here