Cinema News 2022 : விஜய் டிவியில் நடிக்கும் நகைச்சுவை நடிகர் குண்டு கல்யாணம்!

0
59
vijaytv

அறிமுகம்

வித்தியாசமான உடல் அமைப்பு இருந்தாலும் நடிக்க முடியும் என சாதித்து காட்டியவர்களில் முக்கியமானவர் நடிகர் குண்டு கல்யாணம். நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னை வந்து கடும் போராட்டத்திற்கு பிறகு மழலை பட்டாளம் படத்தின் மூலம் அறிமுகமானவர்.

படங்கள்

சூப்பர் ஸ்டாருடன் தில்லுமுல்லு, போக்கிரி ராஜா, படிக்காதவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவருடைய பேச்சு திறமையின் மூலம் அதிமுக கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வந்துள்ளார்.

சோகம்

சமீபத்தில் இவர் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் நடிகர்கள், அரசியல்வாதிகளிடம் உதவி கேட்டு இருந்தார். உதவிகள் கிடைக்காததால் ஆபரேஷனை தள்ளி வைத்துள்ளார்.

பேட்டியில் கூறியவை

சினிமாவில் பேர்,புகழ் கிடைத்தது பெரிதாக சம்பாதிக்க முடியவில்லை. அவருடைய பொண்ணு கல்யாணத்துக்கு வைத்திருந்த நகைகளை திருடி சென்றுள்ளனர். சட்டமன்றம் அதற்கான தீர்வை கொடுக்கவில்லை.

தேர்தல்

உடம்பு சரியில்லாமல் இருந்த போது யாருமே உதவவில்லை என்றும் ஓபிஎஸ் ஐயா மட்டும் தான் உதவி செய்தார் என கூறியுள்ளார்.

செந்தில்

குண்டு கல்யாணம் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிப்பதாக சீரியலின் நடிகர் இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். அவருடன் பணியாற்றுவது மிக மகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டிருந்தார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here