Competitors speak slanderous words in Big Boss! : பிக்பாஸில் கொச்சை வார்த்தைகளை பேசும் போட்டியாளர்கள்!

0
181

சர்ச்சை

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து போட்டியாளர்களுக்குள் ஏகப்பட்ட சண்டைகளும், விவாதங்களும் ரசிகர்களை பூர்த்தி செய்து வருகிறது. இரண்டாவது டாஸ்க்கின் போது காண்டம் பற்றி விவாதித்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.

விவாதம்

இந்த நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து வருகின்றனர். இதனால் அதை குறித்து வனிதா கேட்டுக்கொண்டதால் போட்டியாளர்கள் இந்த விவாதத்தை நிறுத்திக் கொண்டனர்.

டாஸ்க்

கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்க்கில் ஆசிரியராக அனிதா உள்ளார். மாணவராக இருக்கும் நிரூப் காதல் கடிதம் எழுதி கொடுக்கிறார். அதனை அனிதா ஏற்க மறுக்கிறார். பின்னர் பாலாவிடம் இவன் இருக்கிற உயரத்திற்கு லவ் லெட்டர் கொடுக்கிறான் என அனிதா முறையிடுகிறார். அதற்கு பாலா உங்க உயரத்துக்கு முழங்கால் போட்டுக்கொள்வான் என பேசியவை பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது.

வெறுப்பு

இவ்வாறு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் காமெடி என்ற பெயரில் போட்டியாளர்கள் அடிக்கும் அர்த்தமற்ற பேச்சு பலருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

நேற்றைய நிகழ்ச்சி

பாலாஜி மற்றும் நிரூப் மாறி மாறி அடிக்கப் போகும் அளவுக்கு சண்டை போட்டது பரபரப்பை கிளப்பியுள்ளது. தற்போது ஜூலியை பார்த்து நிரூப் சொன்ன வார்த்தை பலரையும் முகம் சுளிக்கவைத்துள்ளது.

கொச்சை வார்த்தை

நிரூப்பை பார்த்து நீ பொய் தான் பேசுற என ஜூலி கூறியுள்ளார். அதற்கு பதிலுக்கு கொச்சை வார்த்தை ஒன்றை நிரூப் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜூலி என்னடா பேசுன என கூறி கதறுகிறார்.

அதிகம் சர்ச்சை

மற்ற போட்டியாளர்கள் அருகில் வர நீ தான் பொய் சொல்லிட்டே இருக்க என நிரூப் கத்திக் கொண்டே இருக்கிறார். அவரின் வார்த்தையால் மனமுடைந்த ஜூலி கண் கலங்குகிறார். இந்த ப்ரோமோக்கள் தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் சர்ச்சையை உருவாக்கியது.

நடவடிக்கை

இதுபோன்ற கொச்சை வார்த்தைகள் பேசுவது பற்றி, சிம்பு மற்றும் பிக்பாஸ் குழுவினர் நிச்சயம் நடவடிக்கை எடுத்து இந்த மாதிரியான வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வழி செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here