Rahul Gandhi! : அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி!

0
65

விசாரணை

நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையை வாங்கியதில் நடைபெற்ற மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுலிடம் அமலாக்க துறையினர் விசாரணையை நடத்தினர். 11 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ராகுல் திணறியதாக தெரியவந்துள்ளது.

அமலாக்கத்துறை அலுவலகம்

இரண்டாவது நாளான இன்றும் ராகுலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்னர் காங்கிரஸ் தலைமையகம் சென்றுள்ளார் ராகுல். பின்னர் அங்கிருந்து அவர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

கைது

ராகுலிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பினை தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here