Rainwatter Harvesting மழை நீரை சேமித்து நீர்த்தேக்கம் உருவாக்கல்: காட்டூர் – தத்தமஞ்சி ஏரிகளை இணைக்க ரூபாய் 62 கோடி செலவில் திட்டம்:

0
43
காட்டூர் -தத்தமஞ்சி ஏரிகளை இணைத்தல்:

திருவள்ளூர் மாவட்டம் அருகே பொன்னேரி யை அடுத்த காட்டுபுற கிராமத்தில் 362 ஏக்கர், அதன் அருகில் உள்ள தத்தமஞ்சி கிராமத்தில் ,252 ஏக்கர் பரப்பில் இரண்டு பாசன ஏரிகள் அமைந்துள்ளன. இந்த ஏரிகளை இணைத்து நீர்த்தேக்கம் அமைக்கக வேண்டும் என பொதுப்பணி துறை அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர்.

dam 5

மழை நீர் சேகரித்தல்:

ஆரணி ஆற்றில் உள்ள லட்மி புறம் அணைக்கட்டிலிருந்து கால்வாய் மூலமாக மழை நீர் சேமிக்கப்படுகிறது. இங்கு மழை காலத்தில் இரண்டு ஏரிகளிலும் 0.053 என்ற அளவு தணண்ணீர் சேமிக்கப்படுகிறது. இந்த ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் நீர் விவசாயிகளுக்கு பெரிதும் பயன்படுகிறது. மற்ற காலங்களில் விவசாய நிலங்கள் தரிசாக போடப்பட்டிருக்கும் ஏரிகளில் தங்கும் தண்ணீரைக்கொண்டு விவசாயம் செய்யப்படுகிறது.

Rainwater harvesting 1

அரசிடம் உத்தரவு வாங்குதல்:

விவசாயிகளின் சிரமத்தை போக்கும் பொருட்டு ஏரிகளில் நீரை சேமிக்க அரசின் கவனத்திற்கு இந்த திட்டம் கொண்டு செல்லப்படுகிறது.இதற்காக 62 கோடி ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்ய வேண்டும் எனவும், ,ஏரிகளை சுட்டி 5 மீட்டர் உயரத்திற்கு கரைகளை கட்ட வேண்டும் எனவும் கோரிக்கைகள் விடப்பட்டன. வரும் செப்டம்பர் மதத்திற்குள் பணிகளை முடித்து தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டன .

நீர்த்தேக்கம் செய்வதால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள்:

புதிய நீர்த்தேக்க பணிகளில் 90 சதவீதம் முடிந்ததாகவும, மற்றும் கரைகள் இயந்திரங்கள் மூலம் சமன்படுத்தும் பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதன் மூலம் வேலூர், ரெட்டிபாளையம், காட்டூர் போன்ற கிரமங்களில் உள்ள பல விவசாயிகள் பயனடைவார்கள். இந்த திடடம் விவசாயத்திற்கு மற்றும் குடிநீருக்கு பயன்படும் எனவும் கே.கண்ணன், நீர்த்தேக்க திட்ட உதவி பொறியாளர், பொன்னேரி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here