Tamil News தமிழகத்தில் தொடர் மழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு..

0
51

தமிழகத்தில் தொடர் மழை:

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கன முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 16 மாவட்டங்களான நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் தேனி,திண்டுக்கல், சேலம், திருப்பத்தூர் ,வேலூர், ராணிப் பேட்டை திருவண்ணாமலை, திருச்சி, தருமபுரி, குமாரி, நெல்லை ஆகிய 16 மாவட்டகங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மீன் பிடிக்க தடை:

கனமழை காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது, காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கபட்டுள்ளது. மேலும் லட்சத்தீவு குமரி கடல் தென்தமிழக கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அரசுஅறிவித்துள்ளது.

இடி மின்னலுடன் கூடிய மழை:

சென்னையில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனவும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னனை வானிலை மையம் தகவல்.சூரை காற்று வீசும் என்பதால் மக்கள் வெளிய செல்ல வேண்டாம் எனவும் அறிவித்துள்ளது.மேலும் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here