Tiger Sport 660 Bike! : தற்போது அறிமுகமான டைகர் ஸ்போர்ட் 660 பைக் சிறப்பம்சங்கள்!

0
51

அறிமுகம்

ட்ரையம்ப் புதிய பைக் டைகர் ஸ்போர்ட் 660ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அறிமுக விலை ரூபாய் 8.95 லட்சம் ஆகும். இதன் லுக் மற்றும் அம்சங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன.

முன்பதிவு

பிரீமியம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ட்ரையம்ப் இந்த பைக்கினை செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்டைலாகவும், சிறப்பாகவும் இருக்கும் இதனை இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.

நிறங்கள்

புதிய டைகர் ஸ்போர்ட் 660 பைக் லூசர்ன் புளூ, சஃபைபர் பிளாக், சஃபையர் பிளாக் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இது ஒரு சாகச பைக் என்பதால் கரடுமுரடான சாலைகளிலும் இதனை நம்பிக்கையுடன் ஓட்டலாம்.

எஞ்சின்

டைகர் ஸ்போர்ட் 660பைக்கில் 660சிசி, 3 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 81பிஎஸ் ஆற்றல், 64என்எம் உச்ச விசையை உருவாக்கும் திறன் கொண்டது. இந்த பைக்கின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 17 லிட்டர் ஆதலால் நீண்ட பயணங்களின் போது எரிபொருள் பற்றி கவலைப்பட வேண்டாம்.

அம்சங்கள்

இது பாதுகாப்பு, கட்டுப்பாட்டிற்கான சிறந்த அம்சங்களுடன் வருகிறது. TFT டிஸ்பிளே, 2 ரைடிங் மோடுகள், சாலை, மழை மாறக்கூடிய இழுவை கட்டுப்பாடு, முழு LED விளக்குகளுடன் கூடிய கருவிகள் என பல அம்சங்களை கொண்டுள்ளது. இந்த பைக்கின் பராமரிப்பு செலவும் அதிகம் இல்லை என்பதால் சிறப்பாக உள்ளது.

நிறுவனம்

டைகர் ஸ்போர்ட் 660 பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்கின் நேரடி அன்பாக்சிங் ஏப்ரல் 2 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ட்ரையம்ப் டீலர்ஷிப்பில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here